சித்திரைப் பட்டத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்ய ஆர்வம்

83பார்த்தது
சித்திரைப் பட்டத்தில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்ய ஆர்வம்
உளுந்து பயிரிட ஏற்ற தருணம் சித்திரை பட்டமாகும். இந்தப் பட்டத்தில் உளுந்து பயிரிட்டால் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம் என்று தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதா கூறினார். உளுந்து சாகுபடியை பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானதாகும். உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெற தகுந்த உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். கோடைகாலப்பருவத்திற்கு ஆடுதுறை 5, வம்பன் 8,11 போன்ற ரகங்கள் உகந்த ரகங்கள் ஆகும். விதைத்த 15 நாட்களில் செடிகளை களைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பராமரிப்பதன் மூலம் செடிகள் நன்கு கிளைத்து அதிக காய்கள் பிடிக்க ஏதுவாகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி