பாகனை கொன்ற கோயில் யானை: பதறவைக்கும் வீடியோ

64036பார்த்தது
கேரளா வைக்கம் கோயில் ஒன்றில் யானை பாகனை மிதித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இதில் அரவிந்தன் (25) என்ற பாகன் உயிரிழந்தார். டி.வி புரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுவாமி கோயில் திருவிழாவிற்காக தொட்டிக்காடு பகுதியில் இருந்து குஞ்சுலட்சுமி என்கிற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. யானை அலங்கரிக்கப்பட்டு கொண்டிருந்தபோது திடீரென பாகனை எட்டி உதைத்து, தலையில் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி