கள்ளக்குறிச்சி: கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்

69பார்த்தது
கள்ளக்குறிச்சி: கிசான் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின்கீழ் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2, 000 வீதம் வருடத்திற்கு ரூ. 6, 000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 82 ஆயிரத்து விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 5 ஆயிரத்து 488 விவசாயிகள் தங்கள் விபரங்களை திட்ட வலைதளத்தில் பதிவு செய்யாமல் உள்ளனர். அத்துடன் இத்திட்டம் மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுவதால், இதுவரை வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைக்காத 4 ஆயிரத்து 786 விவசாயிகள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

மேலும் இத்திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களை கொண்டு சென்று பதிவு செய்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெற வேண்டும் என கேட்டுகொண்டார்.

தொடர்புடைய செய்தி