கோவை: பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட தேவனூர்புதூர் பருத்தியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 2 பெண் காட்டு யானைகள் உயிரிழந்து கிடந்துள்ளன. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், காட்டு யானைகள் வனப்பகுதியில் அறுந்துகிடந்த உயரழுத்த மின்சார கம்பியை மிதித்து இறந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.