உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர் வாழ தேவையான ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாகவே கிடைக்கிறது. அத்தகைய உணவின் முக்கியத்துவம் குறித்து உணர்த்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி ‘உலக உணவு தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தினம் உலகின் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது.