சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) ராமசாமி தலைமை தாங்கினார். பி. டி. ஓ. , தலைவர் கமருதீன் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.