சங்கராபுரம்: தி. மு. க. பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம்

62பார்த்தது
சங்கராபுரம்: தி. மு. க. பூத் ஏஜன்ட் ஆலோசனைக் கூட்டம்
சங்கராபுரத்தில் தி.மு.க., சார்பில், அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள பூத் ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் துரை தாகப்பிள்ளை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், நகர அவைத் தலைவர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் கமருதீன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளரான உதயசூரியன் எம்.எல்.ஏ., தொகுதி பார்வையாளர் அன்பழகன் பேசினர். வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், தி.மு.க ஆட்சி அமைக்க, பெருவாரியான ஓட்டுகளை அனைவரும் பெற்றுத்தர அறிவுறுத்தப்பட்டது. அரசு வழக்கறிஞர் பால அண்ணாமலை, தொழிலதிபர் கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி