கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகனங்களில் தக்காளி, வெங்காயம், வேர்கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த இரண்டு வாகனங்களை, இன்று காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் பகல் ரோந்து பணியில் போது பறிமுதல் செய்தார். தொடர்ந்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.