தேர்வுக்கு பயிற்சி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

52பார்த்தது
தேர்வுக்கு பயிற்சி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

அரசு போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு உணவு மற்றும் தங்கும் விடுதியடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் செப். , 14 ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குருப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்கிறது.

இத்தேர்வில் மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறும் பொருட்டு வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்திடும் வகையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு சென்னை மயிலாப்பூர் சாந்தோம் உயர்சாலை சி. எஸ். ஐ. , காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படுகிறது.

இச்சிறப்பு பயிற்சி வகுப்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் பொருட்டு வரும் 29ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரக scdaplacementgmail. com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி