ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம்

80பார்த்தது
ரோட்டரி சங்கம் சார்பில் கண் பரிசோதனை முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் டி. எம். பள்ளி வளாகத்தில் நடந்தது.

ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபிநாத் வரவேற்றார். சேதுலட்சுமி வேங்கடநாராயணன் முதல் நோயாளிக்கு அடையாள அட்டை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

முனுசாமி, உஷா முனுசாமி, முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், சுதாகரன், செ ந்தில்குமார், முர்த்தி, ரகுநந்தன், சுரேஷ் , துணை ஆளுனர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் பூஜா, கீர்த்தி கலந்து கொண்டு 155 பேர்களின் கண்களை பரிசோதனை செய்தனர். இதில் 84 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமில் மணிவண்ணன், அசோக், பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி