சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் எந்த ஒரு திட்டமும் இல்லாததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர், ஏழுமலை வட்டச் செயலாளர் மாரிமுத்து, விவசாய சங்கம் பழனி மற்றும் பூண்டி ராமசாமி மேலும் கட்சி தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு பட்ஜெட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.