அரசு பஸ் நடத்துநர் பணிக்கு தேர்வாகும் பெண்களுக்கான உயரத்தை 150 செ.மீ ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பஸ் நடத்துநர் பணியில் சேர குறைந்தபட்ச உயரம் 160 செ.மீ ஆக இருப்பதால் குறைவான பெண்களே இந்த பணிக்கு தேர்வாகின்றனர் என தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்நிலையில், அதிக எண்ணிக்கையில் பெண் நடத்துநர்கள் பணியில் தேர்வாகும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்கள் நடத்துநராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.