வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதற்கு FASTag பயன்படுத்தி வருகின்றனர். இந்த FASTag-ல் வரும் 17ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடியை கடப்பதற்கு முன்பு FASTag கணக்கில் போதிய இருப்புத் தொகை இருக்கிறதா? என ஆய்வு செய்யுங்கள். இருப்புத் தொகை இல்லையெனில், உங்க கணக்கு பிளாக் செய்யப்படும், இரு மடங்கு அபராதம் கட்ட நேரலாம். எனவே இருப்புத் தொகை மற்றும் KYC விவரங்களை அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது.