நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கழுத்தில் ஏற்பட்ட கட்டியை அகற்ற குழந்தை கடந்த பிப். 10-ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதையடுத்து நேற்று (பிப். 12) இரவு MRI ஸ்கேன் எடுத்தபோது ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து போலீசாரும், வட்டாட்சியரும் விசாரிக்கின்றனர்.