சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்த தமிழ் ஆசிரியர் சுதாகர் (43) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று (பிப். 12) கைது செய்திருந்தனர். பாலியல் தொந்தரவால் மாணவனுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சுதாகரை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.