சிவகங்கை: சாக்கூரில் பட்டியலினத்தவரை அம்மன் கோயிலுக்குள் நுழைய தடுப்பதாகவும், டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாகவும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, சமரச கூட்டத்திற்கு தாசில்தார் முபாரக் உசேன் அழைப்பு விடுத்தார். தாசில்தார் கூறுகையில், ''பட்டியலினத்தவர் கோயிலில் நுழைய தடை, இரட்டை டம்ளர் முறை புகார் கூறியவர்கள் அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யாததால் புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது'' என்றார்.