சிவகங்கை: சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் பிரணிதா அண்மையில் இரவு நேர பணியில் இருந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி உட்பட சிலர் தன்னை தாக்கியதாக புகார் கூறினார். காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார் உத்தரவிட்டார்.