புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம்

59பார்த்தது
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் அறிமுகம்
மக்களவையில், 2025 வருமான வரி சட்ட மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். புதிய வருமான வரி மசோதாவில் 23 அத்தியாயங்களும், 16 அட்டவணைகளும் இடம்பெற்றுள்ளன. வரி மதிப்பீடு ஆண்டு, நிதி ஆண்டு போன்ற பல வார்த்தைகள் புதிய சட்டத்தில் எளிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய வருமான வரி மசோதாவை நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப நிதி அமைச்சர் பரிந்துரை செய்தார். அதன் பேரில், நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி