வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

75பார்த்தது
வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார். சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன் சிறப்புரையாற்றினார். கல்லுரி வளாகத்தில் மாவட்ட நீதிபதி மரக்கன்றுகளை நட்டார். முகாமில் கல்லுரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி