தியாகதுருகம் அடுத்த சுசீலா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு திருக்கைலாய பரம்பரை சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை தாங்கினார். திருச்சி வேதாகம அகாடமி நிறுவனர் கல்யாண சுந்தர சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். விஸ்வநாதன் குருக்கள் வரவேற்றார். பரணிதரன், ஜெயலட்சுமி, அக் ஷரா, சிவ செந்தில் நாதன் ஆகியோர் ஆகம நூல்களை பாராயணம் செய்தனர். குளித்தலை ராமலிங்கம் கந்தபுராண ஞான சொற்பொழிவு நிகழ்த்தினார்.
சிவாச்சாரியார் தில்லை கார்த்திகேய சிவம் எழுதிய கந்தபுராணத்தில் சிவபரத்துவம் தொகுதி 2, நூலை சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் வெளியிட்டார்.
முதல் பிரதியை சுசீலா கல்வி நிறுவன தாளாளர் செல்வகுமரன், ஜெயக்குமார், கணபதி ஐயர் பெற்றுக் கொண்டனர்.
டாக்டர் ராஜலட்சுமி, வித்யா, ஐஸ்வர்யா உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். தில்லை கார்த்திகேய சிவம் நன்றி கூறினார்.