கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனூர் துணை மின் நிலையத்தில் நேற்று( ஜூலை 26) மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உதவிமின் பொறியாளர் ஜெயமூர்த்தி தலைமையில் ஊழியர்களுக்கு எர்த்ராடு, பெல்ட் ரோப், சேப்டி பெல்ட், கையுறைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அனைத்து மின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.