மத்திய கிழக்கு நாடான ஏமனில் வசிக்கும் ஜரானிக் பழங்குடியின மக்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியாக 'ஒட்டகம் மீது தாவி குதித்தல்' போட்டி உள்ளது. நம்மூரில் 'பச்ச குதிரை' போட்டி போல ஒட்டகத்தின் மீது தாவி குதிக்க வேண்டும். இரண்டு, மூன்று ஒட்டகங்களை வரிசையாக நிற்க வைத்து அதன் மீது தாவிக்குதிக்க வேண்டும். இது போட்டியில் பங்கேற்பவரின் வேகம், வலிமை, விவேகம் போன்றவற்றை தீர்மானிக்கும் விதமாக இருக்கும்.