மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜெயம் ரவியின் மனு அக்.10ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார். மனைவியிடம் இருந்து பிரிவதாக ஜெயம் ரவி நேற்று சமூகவலைதளங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.