டெல்லியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்கள் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 8,500 உதவித்தொகை வழங்கப்படும். ரூ. 25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு, பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.