மனிதர்கள் கடலில் வீசும் பிளாஸ்டிக் பொருட்களை மீன்கள் உண்கின்றன. இதனால் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் சேர்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ட்லாந்து மாநில பல்கலைக்கழகம் மீன்களின் உடலில் நுண் நெகிழிகள் பரவலாக இருப்பதை கண்டறிந்துள்ளது. இவற்றை உட்கொண்டால் நம் உடல் நலனும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மனிதர்கள் செய்யும் பிற்போக்கு செயல்களால் மீண்டும் மனிதர்களுக்கே ஆபத்து ஏற்படுவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.