கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை தென்கொரிய நாட்டைச் சேர்ந்த மின்சூம்கிம் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி, நடையனூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இளைஞர்கள் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தென்கொரிய இளைஞர் 'ஜெயிலர்' படத்தில் வரும் 'காவாலா' பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி அசத்தினார்.