வெண்புள்ளி தொற்று நோயா? மனிதர்களிடமிருந்து பரவுமா?

51பார்த்தது
வெண்புள்ளி தொற்று நோயா? மனிதர்களிடமிருந்து பரவுமா?
வெண்புள்ளி தொற்றுநோய் என்கிற எண்ணம் பலரிடம் இருக்கிறது. ஆனால் வெண்புள்ளி ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது. ஒருவரை தொடுவதன் மூலமோ, உடல் ரீதியாக உறவு கொள்வதன் மூலமாகவோ வெண்புள்ளி பரவாது. ஆனால் இது பரம்பரையாக வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பலர் வெண்புள்ளியை தொழுநோய் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். எனவே வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி