பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து காட்டும் அக்கறை இதுதானா? என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசை காட்டாக விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் தள பக்கத்தில், "பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை நடத்தும் பழங்குடி தொழில் முனைவோர் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு அரசிடம் தகவல்களே இல்லை என்கிறார் அமைச்சர். பழங்குடி மக்களில் இருந்து குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்ததாய் பெருமைப்பட்டுக்கொள்ளும் அரசு, சுமார் 1.25 கோடி பழங்குடி மக்களின் வாழ்க்கை குறித்து காட்டும் அக்கறை இதுதானா?" என்று பதிவிட்டுள்ளார்.