மனிதனாக பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு தான். நமது கனவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. கனவு அறிவியலின் படி, உங்கள் கனவில் நீங்கள் உணவு உண்பதை கண்டால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. வரும் காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அதே போல ஏதாவது நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், விரைவாக குணமாகப் போகிறீர்கள் என அர்த்தம்.