தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியா அண்ணாமலை?

74பார்த்தது
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியா அண்ணாமலை?
தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் தலைவர்களாக அண்ணாமலைக்கு முன்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் எல்.முருகன் இருந்தனர். தமிழிசை தலைவராக இருந்த போது கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வந்தது. நோட்டா கட்சி என பெயர் பிரபலமானது அந்த காலக்கட்டத்தில் தான். அவரது தலைமையின் கீழ் பெரிதான வளர்ச்சியை பாஜக பெறவில்லை. எல்.முருகன் தலைவரான பின்னர் அவர் கையில் எடுத்த வேல் யாத்திரை பாஜகவுக்கு பிரபல்யத்தை கொடுத்தது. 2021ல் அண்ணாமலை தலைமை பொறுப்பு பின்னர் கட்சிக்கு புது தெம்பு கிடைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரின் துணிச்சலான பேச்சு கவனத்தை ஈர்த்தது. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக மாறிய அவரின் தலைமையும் 2024 தேர்தலில் அக்கட்சி 11 சதவீதம் வாக்குகளை தாண்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தொடர்புடைய செய்தி