மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை!

9851பார்த்தது
மூதாட்டியை குளத்தில் மூழ்கடித்து கொலை!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசர்குளம் தென்பாதி பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற சாந்தி அம்மாள் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ளனர். மூதாட்டியை நீரில் மூழ்கடித்து 15 சவரன் எடை கொண்ட தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை நாகுடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி