சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் 'பண்ணைக்காடுகள்'

74பார்த்தது
சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் 'பண்ணைக்காடுகள்'
விவசாயம் செய்யும்போது மற்ற பயிர்களுடன் மரப்பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்யும் முறைக்குப் பெயர்தான் 'பண்ணைக்காடுகள்' வளர்ப்பு. இது தண்ணீர் உள்ள தோட்டங்களில் சாத்தியம்தான். இந்த வகைக் காடுகள் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீர்வாக அமைகிறது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த வகைப் பண்ணைக்காடுகளின் மூலம் விவசாயிகள் நல்ல பலன் பெறுகின்றனர்.ஒரு குறிப்பிட்ட வகை மரங்களை மட்டும் நடவு செய்தால் அதற்கு 'தோப்பு' என்று பெயர். பல்வேறு வகை மரப்பயிர்களை கலந்து நட்டால் அதற்குப் பெயர் 'காடு'. பண்ணைக்காடுகள் பெரும்பாலும் தோட்டத்தின் ஊடுபயிராகவோ, தனி பயிராகவோ அல்லது, வயல்களின் ஓரங்களிலோ நடவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி