ராஜஸ்தானில் மாணவி திடீர் தற்கொலை

83பார்த்தது
ராஜஸ்தானில் மாணவி திடீர் தற்கொலை
உயர் படிப்புக்கும், வேலைப் பயிற்சிக்கும் பெயர் பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடர் மாணவர் தற்கொலைகள் தொடர்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவைச் சேர்ந்த பாகிஷா திவாரி (18) என்ற மாணவி தனது தாய் மற்றும் சகோதரருடன் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை மாலை இளம்பெண் தான் தங்கியிருந்த கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி