வாக்குகளை பிரித்த மாயாவதி.. பாஜகவுக்கு துணை நின்றதாக விமர்சனம்!

53பார்த்தது
வாக்குகளை பிரித்த மாயாவதி.. பாஜகவுக்கு துணை நின்றதாக விமர்சனம்!
உத்தரப்பிரதேசத்தில் வாக்குகளை பிரித்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கு பகுஜன் சமாஜ் கட்சி உதவியதாக சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் 16 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற பகுஜன் சமாஜ் கட்சி காரணமாக அமைந்துள்ளது. குறிப்பிட்ட 16 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற வித்தியாசத்தை விட பகுஜன் சமாஜின் வாக்குகள் அதிகம்.

15,647 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் சமாஜ்வாதி கட்சி தோற்ற அலிகர் தொகுதியில் 1,23,929 வாக்குகளும், 28,670 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோற்ற அம்ரோகா தொகுதியில் 1,64,099 வாக்குகளும் பெற்றுள்ளது. மாயாவதி இந்தியா கூட்டணிக்கு சென்றிருந்தால் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி