எச்சரித்த உள்ளுணர்வு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

62பார்த்தது
எச்சரித்த உள்ளுணர்வு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
வயநாட்டில் நேற்று முன் தினம் (ஜூலை 30) ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஐ தாண்டியுள்ளது. முண்டகையில் வசிக்கும் ஷகிரா என்ற பெண்ணுக்கு பெரிய ஆபத்து வர போகிறது என உள்ளூணர்வு சொன்னதால் தன் கணவர் மற்றும் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அவர் மனதில் தோன்றியது போலவே பெரும் கோரம் அரங்கேறியது. வேறு இடத்திற்கு சென்றதால் ஷகிரா மற்றும் குடும்பத்தார் உயிர் பிழைத்தனர்.

தொடர்புடைய செய்தி