கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீருக்காக விலங்குகள் இடம்பெயர்வதை தடுக்க, வனத்தில் ஆங்காங்கே கட்டப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிங்கவால் குரங்கு, யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட பல விலங்குகள் இருக்கின்றன. தண்ணீருக்காக விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் நிரப்பப்படுகின்றன. இதனால் விலங்குகள் இடம் பெயர்வது குறையும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.