சிகரெட்டுடன் சிறுமி இன்ஸ்டா ரீல்ஸ்.. பெல்ட்டால் வெளுத்த தந்தை

12563பார்த்தது
சமீப காலமாக, பெரும்பாலும் இளைஞர்கள் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்காக பல்வேறு ஸ்டண்ட்டுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சாலையில் சிகரெட் பிடித்தபடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அந்த சிறுமியின் தந்தை பார்த்துள்ளார். உடனே கடுப்பான தந்தை, சிறுமியை பெல்ட்டால் அடித்து வெளுத்தார். அப்போது, தன்னை அடிக்க வேண்டாம் என சிறுமி கெஞ்சிய நிலையிலும் தந்தை மனம் இறங்கவில்லை. இது எப்போது நடந்தது என தெரியவில்லை, தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி