இந்தியாவின் 76ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும். இதில், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு, இந்தியா உலக தலைவர்களை அழைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தோனேசிய அதிபரை அழைத்துள்ளது. கடந்த ஆண்டில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோனும், 2023ஆம் ஆண்டில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாவும் குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.