தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்படைந்துள்ளது. விமான நிலையத்தில் செக்-இன் செய்ய தாமதவாதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இண்டிகோ இணையதளத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்காக வருந்துவதாகவும் பாதிப்பு சரி செய்யப்பட்டு விரைவில் விமான சேவை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.