'இந்தியன் 2' - தேர்தல் - 'தக் லைஃப்'.. கமல் அப்டேட்

71பார்த்தது
'இந்தியன் 2' - தேர்தல் -  'தக் லைஃப்'.. கமல் அப்டேட்
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைத்துள்ள மக்கள் நீதி மையத் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், மணிரத்னம், சங்கர் இயக்கத்தில் படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், 'இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டன. 'இந்தியன் 2' படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 'இந்தியன் 3' படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும். என்னுடைய தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிறகு 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி