செல்ல பிராணிகளுக்கும் எமனாகும் ஹீட் ஸ்ட்ரோக்

58பார்த்தது
செல்ல பிராணிகளுக்கும் எமனாகும் ஹீட் ஸ்ட்ரோக்
தமிழகத்தில் வீசிக்கொண்டிருக்கும் வெப்ப அலையால் மனிதர்களே இறக்கும் அபாயம் இருக்கும் நிலையில், செல்லப் பிராணிகளுக்கும் இந்த அபாயம் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக நாய்களுக்கு வேகமாக மூச்சு விடுதல், அதிக எச்சில் ஒழுகுதல் இருந்தால் அதன் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக அர்த்தம். எனவே அடிக்கடி ஈரத் துணி கொண்டு துடைத்து விடுவதும், அதன் மேல் தண்ணீர் ஊற்றியும் வெப்பநிலையை குறைக்கலாம். ஐஸ் கட்டிகள் கொண்டு தோல் மேல் தடவுதல் கூடாது. மாலை நேரங்களில் வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீர் கொடுக்க வேண்டும். அதிகமாக மூச்சு விடுதல் சோர்வு மயக்கம் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

தொடர்புடைய செய்தி