சைலன்டாக நடந்து முடிந்த நடிகை டாப்ஸி திருமணம்

49759பார்த்தது
சைலன்டாக நடந்து முடிந்த நடிகை டாப்ஸி திருமணம்
தமிழில் தனுஷின் 'ஆடுகளம்' மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில், தான் பேட்மிட்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலிப்பதாக தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 23ஆம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி