சிறுமியை கடித்த நாய்களை அப்புறப்படுத்த நோட்டீஸ்

73பார்த்தது
சிறுமியை கடித்த நாய்களை அப்புறப்படுத்த நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களுக்குள் வீட்டிலிருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மாநகராட்சி நோட்டீஸில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் உத்தரவின் படி நாய்களை அகற்றவில்லை என்றால் உரிமையாளர் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி