இஸ்லாமிய பெண் மீது வண்ணம் பூச்சு (வீடியோ)

53பார்த்தது
நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விழா கொண்டாட்டத்தின்போது இளைஞர்கள் சிலர் வரம்பு மீறி நடந்துகொள்ளும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள தாம்பூரில் சில இளைஞர்கள், சாலை ஓரமாக நடந்து சென்ற முஸ்லீம் பெண் மீது வண்ண பொடிகளை பூசியுள்ளனர். அந்த பெண் தனது குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். ஆனாலும் அந்த இளைஞர்கள் விடாமல் அந்த பெண் மீது வண்ணங்களை பூசியும் எரிந்தும் விளையாடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி