வெளிநாடுகளில் வேகமாக பரவிவரும் குரங்கு அம்மை நோயை எதிர்கொள்ள இந்தியா தயாராகி வருகிறது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளை அமைப்பது, விமான நிலையங்களை எச்சரிப்பது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய தகவல்களின்படி, அறிகுறி உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு மாற்றுமாறு அரசு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.