நம் நாட்டில் நொறுக்கு தீனி நுகர்வு அதிகமாகிவிட்டது. பீட்சா, பர்கர், சாண்ட்விச், குக்கீஸ், சிப்ஸ் கப் கேக், மிட்டாய், பிரெஞ்ச் ப்ரைஸ் போன்ற 25க்கும் மேற்பட்ட ஜங்க் ஃபுட் வகைகளை இந்தியர்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன் சுவைக்கு பலரும் அடிமையாகி விட்டதால் இதிலிருந்து மீண்டு வெளியில் வர முடியவில்லை. இதில் பல உணவுகள் மைதா மாவில் தயாரிக்கப்படுகிறது. மைதா உடலுக்கு கேடு விளைவுக்கும். எனவே கேடு விளைவிக்கும் நொறுக்கு தீனிகளுக்கு அரசு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.