கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதாலும், வேறு சில காரணங்களாலும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து குறைந்தது. அதன் காரணமாக இன்று காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.70க்கும், அவரைக்காய் கிலோ ரூ.60க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.32க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ 90 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.