நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக
திமுக – கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன்;
திமுக உடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சு சுமுகமாக நடைபெற்றது. அனைத்து தேர்தல்களிலும்
திமுக கூட்டணியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம் என கூறினார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் இந்த முறை நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய 3 தொகுதிகளை கொ.ம.தே.க. கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.