தினசரி ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு கூடுதல் போன
ஸ் வழங்கப்படும் என சீனாவின் குவாங்டாங் மா
காணத்தில் உள்ள டோங்ப
ோ பேப்பர் நிறுவனம் புதுமையான போனஸ் திட்டத்தை அறிவித்தது. திறமையாக உழைப்பதற்கு உடற்தகுதி அவசியம் என்பதால் பணியாளர்களை உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அந்த நிறுவனம் சாதுர்யமாக இந்த திட்டத்தை அமல்படுத்தியு
ள்ளது. ஒரு ஊழியர் ஒரு மாதத்திற்கு 50 கி.மீ தூரம் ஓடினால், ஒரு மாத முழு சம்பளம் போனஸாக வழங்கப்படுகிறது. 100 கி.மீ ஓடுபவர்களுக்கு கூடுதலாக 30% போனஸ்
வழங்கப்படுகிறது.