திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் அறங்காவலர்கள் குழு நேற்று (ஜன., 17) மாலை பதவியேற்றுக் கொண்டனர். திருக்கோயில் புதிய அறங்காவலர் குழு கடந்த 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திருக்கோயில் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக திருப்பூரை சேர்ந்த சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்றார்.